பண்டாரவளை: பண்டாரவளை – பூனாகலை வீதியில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் இன்று (14) இடம்பெற்ற பாரிய மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்தது எப்படி?
லியங்கஹவெல, மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கல் குவாரியில் இன்று வழமை போல் பணிகள் இடம்பெற்றன. இதன்போது, பாறைகளை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் (Blasting) போது, எதிர்பாராதவிதமாக பாரிய அளவிலான மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளன.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

