உள்ளூர் செய்திகள்

புதிய மின் மோட்டார் காப்பீட்டு அட்டை அறிமுகம்

இலங்கையின் காப்பீட்டு துறையை நவீனமயமாக்கும் நோக்கில், தேசிய டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை (National Digital Motor Insurance Card) அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதுவரை பயன்படுத்தப்பட்ட உட்புற (காகித) காப்பீட்டு அட்டைகளுக்கு பதிலாக, இனி வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டு தகவல்களை தொலைபேசி இலக்கத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பின் மூலம் அணுக முடியும் என தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் காப்பீட்டு அமைப்பை கண்காணிப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் உதவியாக, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) மற்றும் பல காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்து 500 டேப்லெட் சாதனங்களை காவல் துறைக்கு வழங்கியுள்ளன.

மேலும், இவ்வருடத்திற்குள் e-Passport (மின் கடவுச்சீட்டு) முறைமையையும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்தார்

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து