உள்ளூர் செய்திகள்

இலங்கையில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி வளியீடு!

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (02) வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, அமைதியைப் பேணுதல் மற்றும் சமூக வாழ்விற்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள், போக்குவரத்து, நீர் வழங்கல் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்ட 15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்த அவசரகால நிலைமை, தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ELankaMirror #SriLankaNews #இலங்கைசெய்தி #BreakingNews #TamilNewsSriLanka

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds