யாழ்ப்பாணம், மரதன்கேணி பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை 2026 ஜனவரி 09 ஆம் திகதி,
வடக்கு கடற்படை கட்டளை, பருத்தித்துறை கடற்படை பிரிவு மற்றும் நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,
மரதன்கேணி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொண்ட சோதனையில் சுமார் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து,
குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,
யாழ்ப்பாணம், சம்பியன்பத்து பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும்,
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா கையிருப்பும்
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


