கம்பளை – அம்புலுவாவ மலையின் சரிவுப் பகுதிகளில் பாரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) உத்தியோகபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, அதி அபாய வலயங்களில் அமைந்துள்ள 18 வீடுகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்புலுவாவ மலையில் நிலச்சரிவு அபாயம்

