இலங்கையை மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் மற்றுமொரு பாரிய காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை Hayleys Fentons நிறுவனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது
இலங்கை அரசாங்கம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70% சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) மூலம் பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதில் மன்னார் பிராந்தியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையின் முன்னணி பொறியியல் நிறுவனமான Hayleys Fentons, தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்த நவீன காற்றாலைப் பண்ணையை அமைக்கும் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளது

