தேசியப் பேரழிவாக உருவெடுத்துள்ள நச்சுப் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடும் ஒன்றாக” (Ratama Ekata) தேசியத் திட்டத்தின் வட மாகாண விசேட நிகழ்ச்சித் திட்டம் நாளை (16) மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமை தாங்கவுள்ளார்.
திட்டத்தின் பயணப் பாதை
நச்சுப் போதைப்பொருட்களற்ற ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் ஜனாதிபதியால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
• இதன் கன்னி நிகழ்வு 2025 அக்டோபர் 30 அன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
• அதனைத் தொடர்ந்து, தென் மாகாணத்திற்கான விசேட நிகழ்ச்சித் திட்டம் 2025 நவம்பர் 20 அன்று தங்காலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

