கட்டுரைகள் உள்ளூர் செய்திகள்

கோட்டாவின் பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிக்கிறது” – பாராளுமன்றத்தில் சாணக்கியன் எச்சரிக்கை!

தற்போதைய அரசாங்கம் புதிய மாற்றத்தைக் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு, உண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்பற்றிய அதே தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோதப் பாதையிலேயே பயணிப்பதாக சாணக்கியன் குற்றம் சாட்டினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள், அரசியல் தீர்வு மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் காட்டும் அலட்சியம், கடந்த கால ஆட்சியாளர்களின் இனவாத அரசியலின் தொடர்ச்சியே என அவர் சுட்டிக்காட்டினார்.

வெறும் புள்ளிவிபரங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாடு முன்னேறுவதாக அரசாங்கம் கூறுவது மாயை என்றும், மக்களின் உண்மையான பொருளாதாரக் கஷ்டங்களுக்குத் தீர்வுகாணாவிட்டால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட அதே எதிர்ப்பு அலையை இந்த அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என அவர் கணித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து