Uncategorized

ஒரே குடும்பத்தில் இருவர் பலி: பனாகமுவ பகுதியில் நேருக்கு நேர் மோதிய கார் – மோட்டார் சைக்கிள்.

காலி, அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  • பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் – ஐரோப்பா கண்டனம்

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல்களை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
Uncategorized

தம்புள்ளையில் பாகிஸ்தானுக்கு வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு–20 சர்வதேச (T20I) கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி, தம்புள்ளையில் புதன்கிழமை