சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) புயல் அனர்த்தத்தினால் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டச் செயலகத்தில் நேற்று (06) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

