நாடளாவிய ரீதியில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்கவில்லை எனத் தெரிவித்து, சங்கத்தின் செயற்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணி முதல் நாளை (06) திங்கட்கிழமை காலை 8 மணி வரை 24 மணிநேரத்திற்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் ஏனைய கிளினிக் சேவைகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியல் மற்றும் கஷ்டப் பிரதேசப் பட்டியல் தொடர்பான முரண்பாடுகளே இந்தப் போராட்டத்திற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழு எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய இன்று காலை முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
✅ இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை போராட்டம். ✅ நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அமுல். ✅ இடமாற்ற நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்.
#ELankaMirror #DoctorStrikeSL #GMOA #HealthMinistrySL #HospitalAlert #SriLankaNews #BreakingNews #TamilNews #LankaMirror



