ஐபிஎல் 2026 தொடரின் 11-வது லீக் போட்டியில் இன்று (05) இரவு 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் மோதவுள்ளன.
இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி கணக்கைத் தொடங்காத சென்னை அணிக்கு, இன்றைய போட்டி ஒரு ‘வாழ்வா? சாவா?’ போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.

👉 எமது WhatsApp சேனலில் இணையுங்கள்: 🔗 https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி, இந்த சீசனில் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் (ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக) தோல்வியைத் தழுவியுள்ளது. குறிப்பாக, பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 209 ஓட்டங்களைக் குவித்த போதிலும், பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள சென்னை, பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
மறுபுறம், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். சின்னசுவாமி மைதானம் சிறியது என்பதால், இன்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


