நோர்வூட், கெசெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கிக் காணாமல் போன பாடசாலை மாணவன், இன்று (05) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

📢 Latest News உடனுக்குடன் உங்கள் மொபைலில்!
👉 WhatsApp சேனலில் இணைந்திடுங்கள்
🔗 https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K
🌐 elankamirror.lk
கடற்படை சுழியோடிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நீண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே இச்சடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11-ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன், நேற்று (04) பிற்பகல் தனது நண்பர்களுடன் இணைந்து கெசெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
மாணவன் நீரில் மூழ்குவதைக் கண்ட அவரது நண்பர்கள் உடனடியாகக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும், அந்தப் பகுதி அதிக ஆழம் கொண்டதாக இருந்தமையால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
நேற்று முதல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகள், இன்று கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, இன்று பிற்பகல் மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


