உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதப் பறவைக் கடத்தல் முறியடிப்பு

யாழ்ப்பாணம், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இன்று (2026 ஜனவரி 14) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகும், அதில் பயணித்த மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கீழ் இயங்கும் கச்சத்தீவிலுள்ள கடற்படைப் பிரிவு, தீவைச் சுற்றிய கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகை […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு 10.2 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது தாய்லாந்து!

தாய்லாந்து அரசாங்கத்தின் இந்த நிதிப் பங்களிப்பை, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நேற்று மாலை (ஜனவரி 16) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களைச் சந்தித்து உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்

Uncategorized

திட்வா புயலுக்குப் பின் மீண்டும் தொடங்கும் ரயில் சேவைகள்

திட்வா’ (Ditwah) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. மீள ஆரம்பமாகும் முக்கிய ரயில் சேவைகள்: எதிர்வரும் ஜனவரி 20, 2026 முதல் பின்வரும் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்புகின்றன:

உள்ளூர் செய்திகள்

நுவரெலியாவில் பனிப்பொழிவு வாய்ப்பு; பல மாகாணங்களில் பனிமூட்டம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds