கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளில், மண்சரிவு அபாயத்திற்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, குறித்த பகுதிகளில் மண் சரிவு, பாறை சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக NBRO எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவசர எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


