Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி வளியீடு!

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (02) வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, அமைதியைப் பேணுதல் மற்றும் சமூக வாழ்விற்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2ஆம் பிரிவின் கீழ் […]

உள்ளூர் செய்திகள்

ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உத்தியோகபூர்வமாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஹார்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி […]

உள்ளூர் செய்திகள்

சுரேஷ் சலேயின் கைது அரசியல் பழிவாங்கலா? – மஹிந்த ராஜபக்ஷ கேள்வி

ஹோமாகமவில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய கிழக்கு போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார்

உள்ளூர் செய்திகள்

லுனுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் சோகம்: காணாமல்போன இளைஞர்களில் ஒருவரது சடலம் மீட்பு!

லுனுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரது சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள், அவர்கள் பயணித்த படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மத்தியில், நேற்று அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் […]

உள்ளூர் செய்திகள் விளையாட்டு செய்திகள்

தொடர் தோல்விகளால் பொறுமையிழந்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்று வீதியில் இறங்கினர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர் உடனடியாகப் பதவி விலகக் கோரி கொழும்பு மெய்ட்லண்ட் பிளேஸில் உள்ள தலைமையகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நிர்வாக மாற்றம் அவசியமா? உங்கள் கருத்தைக் கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇 #LankaMirror #LPC #SriLankaCricket #CricketProtest #SLC #CricketNews #Colombo #BreakingNews

எரிபொருள் விநியோகம் குறித்து சிபெட்கோ விளக்கம்

மத்திய கிழக்கு பதற்றத்தினால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அஞ்சுவதால் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எனினும், மே மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்றும் சிபெட்கோ தலைவர் உறுதியளித்துள்ளார்

உள்ளூர் செய்திகள்

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் விசேட பயண ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. பயண நேரங்கள் மற்றும் கட்டணம்: முக்கிய அறிவித்தல்: இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடல் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறமாட்டாது. எனவே, யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகத் தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு நாளை […]

உள்ளூர் செய்திகள்

இந்தியாவிடம் சிக்கிய ‘பொடி லஸ்ஸி’ இன்று அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்!

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லஸ்ஸி’ என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் (Interpol) தலையீட்டைத் தொடர்ந்து, அவர் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் கைத்தொலைபேசி செயலிகள் (Apps) தொடர்பாக இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்கவும், நிதி மோசடிகளைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைக்கான முக்கிய காரணங்கள்: மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளதன் படி, பின்வரும் காரணங்களுக்காக இந்த நிறுவனங்கள் மற்றும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன: மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள்: சட்டவிரோத நிதி […]

உள்ளூர் செய்திகள்

100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று (23) முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். முக்கிய தகவல்கள்: