விளையாட்டு செய்திகள்

T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலக சாம்பியனாக முடிசூடியுள்ளது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (08) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, உலகக்கிண்ண இறுதிப் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களான 255 ஓட்டங்களைக் (5 விக்கெட் இழப்பிற்கு) குவித்து சாதனை படைத்தது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 89 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்று பலமான இலக்கை நிர்ணயித்தனர். தொடர்ந்து 256 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் (4 விக்கெட்டுகள்) அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 159 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் டி20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிகமுறை கிண்ணம் வென்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு செய்திகள்

முஸ்தஃபிசுர் நீக்கம்: இரு நாடுகளிலும் பரபரப்பு

ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டமை, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வேண்டாம் என வங்கதேச அணி எடுத்த முடிவு, மேலும்
விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக விக்ரம் ராதோர்

இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) நிறுவனம், முன்னாள் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இருந்த விக்ரம் ராதோரை, இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளதாக

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds