லிட்ரோ எரிவாயு விலைகளை இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலை மாற்றங்களுக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விலை விபரங்கள் வருமாறு:
| சிலிண்டரின் அளவு | அதிகரிப்புத் தொகை | புதிய விலை (ரூபா) |
| 12.5 கிலோகிராம் | 300 ரூபா | 3,990 |
| 5 கிலோகிராம் | 120 ரூபா | 1,602 |
| 2.3 கிலோகிராம் | 56 ரூபா | 750 |

