உள்ளூர் செய்திகள்

சூரியவெவவில் விபத்து – மூன்று பிக்குணிகள் படுகாயம்!

சூரியவெவ, நுகேகந்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இரண்டு லொறிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பிக்குணிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (31) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Open Popup

கிளை வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி, திடீரென பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்டுள்ளது. இதன்போது பிரதான வீதியில் வந்த லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு சிறிய லொறியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பிக்குணிகள் மற்றும் அதன் சாரதி ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds