சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கிறது.
அதற்கமைய இன்று நண்பகல் 12.11 மணியளவில் பின்வரும் பிரதேசங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
- நாகவில்லுவ
- கல்கமுவ
- சீகிரியா
- பலுகஸ்தமன
- மாங்கேணி



