Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உலகச் செய்திகள்

புதிய ஈரானிய தலைவர் எங்களிடம் அனுமதி பெற வேண்டும்!” – டொனால்ட் டிரம்பின் அதிரடி

வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய தலைவர், அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்று (08) ஏபிசி (ABC) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானின் புதிய தலைமை எங்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், அவ்வாறு செய்யாத […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையை மனிதநேயமிக்க நாடாக மாற்றுவதே இலக்கு -ஜனாதிபதி அநுர அதிரடி!

இலங்கையை உலகின் மிகச்சிறந்த மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலகில் எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், மனிதநேயத்தின் கொடியை ஏந்திச் செல்லும் தேசமாக இலங்கை விளங்கும் என உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பாக, நுண்நிதி கடன் வலையில் சிக்கித் தவிக்கும் கிராமப்புறப் பெண்களை மீட்பதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும், […]

உள்ளூர் செய்திகள்

கடற்படையின் மெகா நடவடிக்கை! ஆழ்கடலில் சிக்கியது பல கோடி பெறுமதியான போதைப்பொருள்

சர்வதேசக் கடற்பரப்பினூடாக இலங்கைக்குப் போதைப்பொருட்களைக் கடத்தி வர முயன்ற பாரிய முயற்சி ஒன்றைக் கடற்படையினர் முறியடித்துள்ளனர். கடற்படையின் நெடுந்தூரக் கடற்படை நடவடிக்கைப் படைப்பிரிவினர் (Long Range Maritime Surveillance) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருந்தொகையான ஹெராயின் மற்றும் கொகைன் போதைப்பொருட்களைக் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று நடுவழியில் வைத்து முற்றுகையிடப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புக்கு அப்பால் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்ட […]

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை

2026 ஆம் ஆண்டுக்கான ICC T20 உலகக்கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மார்ச் 08) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவின் பலம்: சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்தத் தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தனது பலத்தை நிரூபித்தது. ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

ஜா-எலையில் பரபரப்பு! ‘பட்டுவத்தே சாமர’வின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு.

ஜா-எல: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டில் […]

உலகச் செய்திகள்

மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்!

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் இலங்கைக்குத் தெற்கே மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகளையும், தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் பணியாளர்களையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ரொயிட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை (04) காலி கடற்பரப்பிற்கு அப்பால் 19 கடல் மைல் தொலைவில் வைத்து ‘IRIS […]

உலகச் செய்திகள்

ஈரானில் அதிரடி மாற்றம்! கமேனிக்கு பின் இராணுவத்தின் வசம் சென்றது ஆட்சி அதிகாரம்?

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அந்நாட்டின் இராணுவ மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழுமையான அதிகாரத்தை ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் மத்திய தலைமைத்துவ கட்டமைப்பு சிதைந்துள்ள நிலையில், “போர்க்காலத் தலைமை” (Wartime Leadership) என்ற பெயரில் இந்த அமைப்பு தற்போது இயங்கி […]

உள்ளூர் செய்திகள்

மத்திய கிழக்கு போர்: இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்கால சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில், […]

விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியது.  எனினும், அதிரடியாகத் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 140 பேர் காணாமல் மாயம்; 32 பேர் மீட்பு!

சர்வதேசக் கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஈரானியக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாக அறிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயரை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. இதேவேளை, ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் இன்று (04) அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை […]