உள்ளூர் செய்திகள்

கடற்படையின் மெகா நடவடிக்கை! ஆழ்கடலில் சிக்கியது பல கோடி பெறுமதியான போதைப்பொருள்

சர்வதேசக் கடற்பரப்பினூடாக இலங்கைக்குப் போதைப்பொருட்களைக் கடத்தி வர முயன்ற பாரிய முயற்சி ஒன்றைக் கடற்படையினர் முறியடித்துள்ளனர். கடற்படையின் நெடுந்தூரக் கடற்படை நடவடிக்கைப் படைப்பிரிவினர் (Long Range Maritime Surveillance) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருந்தொகையான ஹெராயின் மற்றும் கொகைன் போதைப்பொருட்களைக் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று நடுவழியில் வைத்து முற்றுகையிடப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புக்கு அப்பால் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையில் குறித்த படகு கைப்பற்றப்பட்டது. இதன்போது படகில் இருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மீன்பிடிப் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக சர்வதேச கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இவ்வாறான அதிரடிச் சோதனைகளைத்

தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds